தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கை
மாநில பேரிடர் மேலாண்மை என்பது பல்வேறு துறைகளின் கூட்டுச் செயல்பாடு ஆகும். இதை ஒழுங்கமைக்கவும், ஒருங்கிணைக்கவும், கொள்கை ஒன்று அவசியம் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு 2004 ஆம் ஆண்டில் மாநில பேரிடர் மேலாண்மைக் கொள்கையை வெளியிட்டது. இது 2013 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது. இது மாநிலத்தில் பேரிடர் மேலாண்மை குறித்த ஒட்டுமொத்த புரிதலை அளிக்கிறது.